புதுச்சேரி அரசு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
மின் கட்டண உயர்வுக்கு எதிராக களமிறங்கிய சுசி கம்யூ.! - condemn
புதுச்சேரி: மின் கட்டண உயர்வைக் கண்டித்து சுசி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சுசி கம்யூனிஸ்ட் கட்சி இன்று புதுச்சேரி மின் துறை தலைமை அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், உயர்த்திய மின் கட்டணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும், பல ஆண்டுகளாக மின் கட்டணத்தை செலுத்த பெரு முதலாளிகளிடம் பணத்தை வசூல் செய்ய வேண்டும், தேர்தல் பரப்புரையில் வரிகளைக் குறைப்பதாகக் கூறி மின் கட்டணத்தை உயர்த்திய காங்கிரஸ் அரசு அதனை உடனே ரத்து செய்ய வேண்டும், தரமான மின் மீட்டர்கள் பொருத்த வேண்டும், புதிய மின் இணைப்புகளுக்குக் கையூட்டு கேட்கும் அலுவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சுசி கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் முத்து தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.