தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் ஊடுருவல் குறித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் தெரிவித்த ஆடு மேய்ப்பன் - Kargil war

கார்கில் போரின்போது பாகிஸ்தான் ஊடுருவல் குறித்து அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் இந்திய ராணுவத்திற்கு தெரிவித்த காரணத்தால் மிகப்பெரிய சதிச் செயல் முறியடிக்கப்பட்டது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

By

Published : Jul 26, 2020, 4:01 PM IST

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடைபெற்ற போரில் கார்கில் போர் மிக முக்கியமானது. காஷ்மீரின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ஊடுருவியது. இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில், காணாமல் போன தனது எருதை தேடிக் கொண்டிருந்த ஆடு மேய்ப்பவர் ஒருவர் பாகிஸ்தானின் சதிச் செயல் குறித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் கொடுத்தார்.

கர்கூன் கிராமத்தை சேர்ந்த தாஷி நம்கியால், மோரப் சேரிங், அலி ராசா ஸ்தான்பா ஆகிய மூவர் ஒருவருக்கு நான்கு முதல் ஐந்து ஆடுகள் என பிரித்துக் கொண்டு பங்சு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். கோடைக் காலம் என்பதால் கால தாமதமின்றி அவர்களால் ஜப்பார் மலைப் பகுதியின் உச்சிக்க செல்ல முடிந்தது. அவர்களுக்கு பிடித்தமான பகுதியில் வெகுநேரம் செலவிடும் நோக்கிலேயே அவர்கள் முன்னதாக சென்றுவிட்டனர்.

வேட்டைக்கு பயன்படும் நோக்கில் லே பகுதியில் வாங்கிய பைனாகுலரை நம்கியால் தன்னோடு எடுத்துச் சென்றிருந்தார். அப்போதுதான், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அங்கு பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவிக் கொண்டிருப்பதை பைனாகுலர் மூலம் அவர் கண்டறிந்தார். தன்னால் அவர்களை தடுக்கு முடியாது என்பதை அறிந்துகொண்ட நம்கியால், அப்போது அங்கு நிலைப்பெற்றிருந்த பஞ்சாப் ரெஜிமெண்ட்டை சேர்ந்த மூன்று அலுவலர்களிடம் தகவல் கொடுத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " மே 3ஆம் தேதி காலை, காணாமல் போன எனது எருதினை கண்டுபிடிக்க ஜப்பார் மலைப் பகுதியிலிருந்து 5 கிமீ தொலைவுக்கு சென்றுகொண்டிருந்தேன். பைனாகுலர் மூலம் மலைப் பகுதியை ஆராய்ந்து கொண்டு சென்றிருந்தேன். ராணுவ உடை அணிந்தவர்கள் அங்கு பயங்கர வெடிகுண்டுகளை புதைத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன்.

சிலரிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. எத்தனை பேர் என்பதை என்னால் கணக்கிட முடியவில்லை. எல்லைப் பகுதிக்கு அப்பால் பாகிஸ்தானிலிருந்து அவர்கள் வந்ததை உறுதிப்படுத்திக் கொண்டேன். பின்னர், மலைப் பகுதியிலிருந்து கீழே இறங்கி வந்து இத்தகவலை இந்திய ராணுவத்திடம் தெரிவித்தேன். நான் கொடுத்த தகவல் உண்மை என அடுத்தடுத்த விசாரணையில் தெரியவந்தது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details