கர்நாடக மாநிலத்தில் உள்ள பண்டிபூர் விலங்குகள் சரணாலயம் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த சரணாலயத்தில் பிரின்ஸ் என்னும் புலி வாழ்ந்தது . இந்த சரணாலயத்தின் விளம்பர தூதரான பிரின்ஸ் அனைத்து சுற்றுலா பயணிகளையும் கவர்ந்தது.
30 கி.மீ சுற்றளவை தனது எல்லையாகக் கொண்ட இதை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகளும், வன உயிரின புகைப்பட கலைஞர்களும் எப்பொழுதும் கேமராக்களை தங்களுடன் எடுத்து செல்வார்கள். அவர்களுக்கு வித விதமான போஸ்களை கொடுத்து பிரின்ஸ் அசத்தும்.
'பிரின்ஸ் லேண்ட் ஹோட்டல்' இந்நிலையில், சர்வதேச புலிகள் தினத்தையொட்டி ’பிரின்ஸ்’ புலி குறித்து வன உயிரின புகைப்பட கலைஞரான ஷமத் கூறுகையில், "பிரின்ஸ் புலியை பார்ப்பதற்காக மக்கள் அதிகளவில் இந்த சரணாலயத்திற்கு வருகை தருவார்கள். இதன் பெயரில் ஒரு தனி இணையதள பக்கமே உள்ளது. இதை பார்த்து நானும் வியந்ததால்தான் மைசூரில் உள்ள எனது தங்கும் விடுதியின் பெயரை 'பிரின்ஸ் லேண்ட் ஹோட்டல்' என்று வைத்துள்ளேன். இந்த புலி 2017ஆம் ஆண்டு உயிரிழந்தது. இதற்கென தனி ஸ்டைல் உள்ளது. வேறு எந்த ஒரு புலியையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
இந்த புலியின் சிற்பமும், புகைப்படங்களும் லட்சக் கணக்கான பார்வையாளர்களை சரணாலயத்திற்கு ஈர்த்துள்ளது. மேலும் அதிக புகழையும், செல்வாக்கையும் சரணாலயத்திற்கு பிரின்ஸ் பெற்றுத் தந்தது” என்றார்.