புதுச்சேரியில் கரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வருவதையடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் இதற்கு, பொதுமக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் நிதியுதவி வழங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியிருந்தது.
அதனடிப்படையில், இதுவரை பல கோடி ரூபாய் அளவில் முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மருந்து வணிகர்கள் நலச்சங்கத்தின் சார்பாக 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் முதலமைச்சர் நாராயணசாமியிடம் வழங்கினர்.