உலக அளவில் உலக வளர்ச்சிக்கான ஆய்வில், இந்திய பொருளாதாரத்தின் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் வேகமாக பொருளாதாரம் வளர்ந்துவரும் நாடுகளில் பட்டியலில் இந்திய பிரதான இடத்தில் உள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், மின்னணு வர்த்தகத்தில் நேரடி முதலீட்டிற்கான அரசு வழிகாட்டுதல்கள், உள்நாட்டு பயனாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.
அரசு மாற்றியமைத்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி,
மின்னணு வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த அதிரடி சலுகைகளை வழங்க முடியாது.
தாங்கள் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களின் பொருட்களை தங்களின் வலைதளங்களில் விற்கக்கூடாது.
ஒரு நிறுவனத்தின் தளத்தில், ஒரே விற்பனையாளர் 25 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்களை விற்க முடியாது.