நாட்டின் 73ஆவது சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியளித்து வரும் அரவிந்த் அட்வெண்ஞ்சர் என்பவர், "ஸ்கூபா டைவிங்" என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், அவரது மாணவர்களுடன் இணைந்து புதுச்சேரி அருகே 60 அடி ஆழத்தில் தேசியக் கொடியை கடலுக்குள் பறக்கவிட்டு புதிய சாதனையை மேற்கொண்டனர். இந்தக் காட்சிகளை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கடலுக்கு அடியில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி - இளைஞர்கள் புதிய முயற்சி! - national flag
புதுச்சேரி: ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்திற்குச் சென்று தேசியக் கொடியை ஏற்றி அசத்தியுள்ளனர்.
தேசியக்கொடி
நிலத்தின் மேற்பரப்பை சுத்தமாக வைத்திருப்பது போல் கடலின் ஆழப் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்ச்சியை நடத்தியதாக அவர் தெரிவித்தார். வண்ண மீன்கள் சூழ தேசியக்கொடி கடலுக்கடியில் பறந்தது காண்போரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
Last Updated : Aug 15, 2019, 8:32 PM IST