பிளாக் ஃபிரைடே, நோ ஸ்மோக்கிங், வெற்றி படங்களை இயக்கிய பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படமான கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் (Gangs Of Wasseypur) மக்கள் மத்தியில் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
பிரிட்டன் நாளேட்டில் இடம் பெற்ற பாலிவுட் திரைப்படம் எது?
பிரிட்டனின் தின நாளேடான தி கார்டியனில் 21ஆவது நூற்றாண்டின் மிகச் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் பாலிவுட் திரைப்படம் கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றன. இதை அவரே இயக்கிய இருந்தார். தக்மன்ஷு துலியா, மனோஜ் பாஜ்பை, நவாஸுதீன் சித்திக், ஹுமா குரேஷி, ரிச்சா சத்தா, ரீமா சென் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட விருதுகள் கிடைத்தது.
இந்நிலையில் பிரிட்டனின் தின நாளேடான தி கார்டியன் (The Guardian) 21ஆவது நூற்றாண்டின் மிகச் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலை வெளியீட்டுள்ளது. அதில் கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் இடம் பெற்றது, அத்திரைப்பட ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கார்டியன் நாளிதழ் கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் திரைப்படத்தை அறிவித்தது பெருமை அளிப்பதாக அதன் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.