லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்துவருகிறார்.
50 வயதான பப்புவை விளையாட்டு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் - ராகுலை விமர்சிக்கும் மத்திய அமைச்சர் - ராகுலை விமர்சிக்கும் மத்திய அமைச்சர்
டெல்லி: 50 வயதான பப்புவை (ராகுல் காந்தி) அரசியல் விளையாட்டு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அமைச்சர் நக்வி விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலடி தந்துள்ள மத்திய அமைச்சர் நக்வி, 50 வயதான பப்புவை (ராகுல் காந்தி) அரசியல் விளையாட்டு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள 50 வயதான பப்புவை அரசியல் விளையாட்டு பள்ளிக்கு அனுப்ப வேண்டும். வதந்திகளை நம்பி பொய்யான தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார். நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், தலைமை ஆகியவற்றின் மீது சந்தேகம் கொண்டு அவர் கேள்வி எழுப்புகிறார்" என்றார்.