இது தொடர்பாக ட்வீட் செய்த அவர், " மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் கமாண்டோ படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது. இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இத்தகைய தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது ", என குறிப்பிட்டுள்ளார்.
'நக்சல் தாக்குதலுக்கு எதிராக நாடு ஒன்றுபட்டு நிற்கிறது' - குடியரசு தலைவர் - கட்சிரோலி
டெல்லி: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் கமாண்டோ படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் கமாண்டோ படை வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 15 கமாண்டோ உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.