தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாட்டுவண்டி ஓட்டி போராட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் - puducherry youth congress

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மாட்டுவண்டி ஓட்டி தொடங்கிவைத்தார்.

puducherry youth congress protest
மாட்டுவண்டி ஒட்டி போராட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர்

By

Published : Feb 6, 2021, 10:02 PM IST

புதுச்சேரி:பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

எரிபொருள் விலை உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்த விலை உயர்வை திரும்பப் பெறவலியுறுத்தியும், பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார் இன்று போராட்டம் நடத்தினர்.

மாட்டுவண்டி ஓட்டி போராட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் நாராயணசாமி

இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கலந்துகொண்டவர்கள் மாட்டுவண்டி பேரணியை நடத்தினர்.

இந்தப் போராட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி மாட்டுவண்டி ஓட்டி தொடங்கிவைத்தார். 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க:கிரண் பேடிக்கு எதிராக நடந்த போராட்டம்: முடித்து வைத்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details