நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசியபோது, புதிய மசோதாவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த அம்சமும் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.
ஒன்பது மணிநேரதிற்கும் மேல் நீடித்த இந்த விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் 311 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 80 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதன் பின்பே மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.