புதுச்சேரி அருகே, கோபாலன் கடைப் பகுதியில் வசித்து வருபவர் பாபு-சுமதி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அருள் பாண்டியன் திருமணமாகி அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அருள் ராஜ், ஆனந்தராஜ் என்ற மற்ற இரு மகன்களும் இரட்டையர்கள். இவர்கள் தனது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு அண்ணன் அருள்ராஜ் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருடைய செல்போன் சார்ஜர் காணவில்லை என்று ஆனந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அண்ணன் திட்டியதால் தலையில் கல்லைப்போட்டுக் கொன்ற தம்பி! - brothers
புதுச்சேரி: செல்ஃபோன் சார்ஜர் திருடியதாக சந்தேகப்பட்டு திட்டிய அண்ணனை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது அங்கு வந்த அவரது தாயார் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர், வாக்குவாதம் முடிந்து தூங்க சென்றுள்ளனர். இருப்பினும், தன்னை திட்டிய அண்ணன் மீது கோபம் குறையாத தம்பி அருள்ராஜ் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.
பின்னர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அண்ணன் அருள்ராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் முலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து, தம்பி ஆனந்தராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.