அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் என்ற நிறுவனம் அவ்வப்போது உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். இதையடுத்து இரண்டாம் இடத்திற்கு பில்கேட்ஸ் தள்ளப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்.
உலக பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ் சரிவு! - மூன்றாவது இடம்
நியூயார்க்: உலக பணக்காரர் பட்டியிலில் பில்கேட்ஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
bill gates
பில்கேட்ஸ் இருந்த இரண்டாம் இடத்திற்கு பெர்னார்ட் அர்னால்ட் வந்துள்ளார். பிரான்ஸை சேர்ந்த எல்விஹெச்எம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான அர்னால்டின் சொத்து இந்த ஆண்டில்தான் அதிகரித்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துகளுடன் பெர்னார்ட் 2ஆவது இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துகளுடன் பில்கேட்ஸ் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
Last Updated : Jul 18, 2019, 11:57 AM IST