மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் உட்பட 23 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'An Era of Darkness' என்ற புத்தகத்தை சசி தரூர் எழுதியதால் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாகித்ய அகாடமியின் செயலாளர் சீனிவாசாராவ், "23 மொழிகளைச் சேர்ந்த தேர்வு குழு உறுப்பினர்கள் பரிந்துரைக்க, நிர்வாகக் குழு ஆலோசனையின்படி விருது அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
விருதை வென்ற சசி தரூர், "இந்த விருதால் நான் கெளரவிக்கப்பட்டுள்ளேன். பெருமையும், திருப்தியும் அளிப்பதாக உள்ளது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. எனது முதல் புத்தகம் 1981ஆம் ஆண்டு வெளியானது. 38 ஆண்டுகளாக இலக்கியம் தொடர்பாக தேசிய அளவில் விருது பெற்றதில்லை. ஆனால், சர்வதேச அளவில் விருது பெற்றுள்ளேன்" என்றார்.