தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகள் - புல்வாமா தாக்குதல்

ஸ்ரீநகர்: புல்வாமாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

புல்வாமா
புல்வாமா

By

Published : Jul 9, 2020, 11:52 PM IST

கடந்த சில நாள்களாகவே எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவிவருகிறது. லடாக் பகுதியில் சீனாவும், காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானும் தாக்குதல் மேற்கொண்டுவந்தது. இதனிடையே, உயர் ராணுவ அலுவலர்கள் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, சீனாவுடனான பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால், காஷ்மீரில் தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண், ராணுவ வீரர் இதில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கர்னல் ராஜேஷ் காலியா கூறுகையில், "அவசர மீட்பு படையின் அம்புலன்ஸ் ஒன்று க்ருவ் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்தது. அவந்திபோராவில் உள்ள மசூதியை அடைந்தபோது, அதன் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளது. படுகாயம் அடைந்த பெண்ணின் பெயர் ரஃபிகா பானு என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல், கடந்தாண்டு பிப்ரவரி மாதம், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், மத்திய ஆயுத காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'காய்ச்சப்படாத பாலை உட்கொள்வது மோசமான விளைவுகளை உருவாக்கும்' ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ABOUT THE AUTHOR

...view details