குல்காம் மாவட்டத்தில் பயங்கராவதி ஒருவர் சுட்டுக்கொலை! - காஷ்மீர் குல்காம்
07:41 July 17
ஸ்ரீநகர்: குல்காம் மாவட்டத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக சமீப காலங்களில் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் குல்காம் மாவட்டம் நாக்நாட்-சிம்மர் பகுதியில் அதிகாலை நடைபெற்ற மோதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் குறித்த விவரம் தெரியவில்லை என்று ராணுவத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதையம் படிங்க:15 மணி நேரம் நடந்த 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை: படைகளை விலக்கிக்கொள்ளும் இந்தியா!