தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் இன்னும் இரண்டு நாளுக்கு மழை? எச்சரிக்க்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்!

ஹைதராபாத்; தெலங்கானாவில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெலங்கானா
தெலங்கானா

By

Published : Oct 20, 2020, 10:58 AM IST

தெலங்கானாவின் பெரும்பாலான பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரை, மாநிலத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மீட்பு பணிகளை மேற்கொள்ள உதவும்படி தெலங்கானா அரசு ஆந்திரா அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, தெலங்கானாவுக்கு படகுகளை விரைவில் அனுப்ப அரசு அலுவலர்களுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாகவே, தெலங்கானாவில் பலத்த மழை பெய்துவருகிறது.

முசி ஆற்றங்கரையில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 30க்கும் மேற்பட்ட கார்கள், ட்ரக்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. கன மழை காரணமாக நிகழ்ந்த உயிரிழிப்பு 70ஆக உயர்ந்துள்ளது, காணாமல் போன இருவரின் உடல்கள் தலைநகர் ஹைதராபாத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாள்களாகவே, ஆந்திரா, தெலங்கானா, வட கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையும் படிங்க: மேற்குவங்க தேர்தலுக்கு வியூகம் ரெடி - சிஏஏவை கையில் எடுத்த நட்டா!

ABOUT THE AUTHOR

...view details