தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் தீவிரமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல் - தெலங்கானா பன்றி காய்ச்சல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

swine flu
swine flu

By

Published : Jan 19, 2020, 2:33 PM IST

தெலங்கானா மாநிலத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் வேகமாகப் பரவிவருவதால் அவசரநிலையில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, 'செப்டெம்பர் மாதம் மழைக் காலத்தில் தொடங்கும் இந்த காய்ச்சல் சிக்கல் முதலில் தீவிரமாக இல்லாவிட்டாலும், தற்போது அது உச்சத்தைத் தொட்டுள்ளது. எனவே, வரும் பிப்ரவரி மாதம் இறுதி வரை மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை அவசர நிலையில் செயல்படும்' என தெலங்கானா சுகாதாரத்துறையைச் சேர்ந்த அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மக்களிடம் தொடர் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ஒன்.என்.ஒன். எனப்படும் வைரஸ் கிருமியால் ஏற்படும் பன்றிக் காய்ச்சல், காற்று மூலமாகப் பரவும் தன்மை கொண்டது. நோய் பாதிக்கப்படவர்களின் இருமல், தும்மல், அசுத்தமாக சுற்றுப்புறத்தை வைத்தல் போன்றவற்றால் பரவும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரௌடி பேபி பாடலுக்கு நடனமாடும் சாயிஷா பேபி

ABOUT THE AUTHOR

...view details