தெலங்கானா மாநிலத்தில், மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஐந்து வயது சிறுமி உதவியாக இருந்துள்ளார். அந்தச் சிறுமியை மாற்றுத்திறனாளிப் பெண் தினமும் துன்புறுத்தி வந்துள்ளார். அவர் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக காவல் ஆய்வாளர் பாலிஷெட்டி சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாலிஷெட்டி சதீஷ் கூறியதாவது, 'சேதர்காட் காவல் நிலைய எல்லையில் உள்ள வாகேத் நகர்ப்பகுதியில் நேற்று முன் தினம் (ஜூன் 12) மாலை 3:30 மணியளவில் ஐந்து வயது சிறுமியை குழந்தைத் தொழிலாளியாகப் பயன்படுத்துவதாகவும், மாற்றுத்திறனாளிப் பெண் சீமா என்பவர் அந்தச் சிறுமியை துன்புறுத்தி வருவதாகவும் புகார் வந்தது.