தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானா போலீஸ் அமைச்சருக்கு கரோனா? - கோவிட்-19 பெருந்தொற்று

ஹைதராபாத்: தெலங்கானா போலீஸ் அமைச்சர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Telangana Home Minster COVID-19 Mahmood Ali தெலங்கானா போலீஸ் அமைச்சர் கரோனா பாதிப்பு கோவிட்-19 பெருந்தொற்று முகம்மது அலி
Telangana Home Minster COVID-19 Mahmood Ali தெலங்கானா போலீஸ் அமைச்சர் கரோனா பாதிப்பு கோவிட்-19 பெருந்தொற்று முகம்மது அலி

By

Published : Jun 29, 2020, 12:14 PM IST

தெலங்கானா மாநிலத்தில் போலீஸ் துறையை அமைச்சர் முகம்மது அலி கவனித்துவருகிறார். இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி தென்பட்டது.

இதையடுத்து இவரின் சளி மாதிரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனைக்கு எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன்29) இவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து முகம்மது அலி, ஜூப்லி ஹில்ஸ் பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவருக்கு பாதுகாப்பு அளித்த பாதுகாவலர்கள் ஐந்து பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சமீபத்தில் ஹைதராபாத் நகர காவல் சரகத்தை சேர்ந்த மூன்று ஐபிஎஸ் அலுவலர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'வென்டிலேட்டர் இணைப்பை நீக்கிவிட்டார்கள்' - உயிரிழப்பதற்கு முன் மகன் தந்தைக்கு காணொலி!

ABOUT THE AUTHOR

...view details