தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமைச்சரின் பேரன் செய்த டிக்-டாக்! புதிய சர்ச்சை - சர்ச்சை

ஹைதராபாத்: காவல் துறையினரின் வாகனத்தில் அமர்ந்துகொண்டு தெலங்கானா அமைச்சரின் பேரன் டிக்-டாக் செய்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

TikTok

By

Published : Jul 18, 2019, 7:05 PM IST

டிக்-டாக் செயலியின் மோகம் காரணமாக பலரும் பல்வேறு சிக்கல்களில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் அலுவலக பணி நேரத்தில் டிக்-டாக் செய்த மாநகராட்சி ஊழியர்கள் சிலர் தெலங்கானா மாநிலத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தச் செய்தியின் தாக்கம் குறைவதற்குள் அடுத்ததாக ஒரு புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தின் உள் துறை அமைச்சர் மெஹ்மூத் அலியின் பேரனான ஃபர்க்குவான் பதிவிட்ட டிக்-டாக் காணொலி ஒன்றை தனது நண்பருடன் சேர்ந்து எடுத்துள்ளார்.

அதில் அவர், காவல் துறை உயர் அலுவலரின் வாகனத்தின் மீது அமர்ந்துகொண்டு அந்த டிக்-டாக் செய்துள்ளார்.

டிக்-டாக் காணொலி புதிய சர்ச்சை

மேலும், அந்தக் காட்சியில் காவல் துறை அலுவலரை மிரட்டுவது போன்ற வசனம் இடம்பெற்றிருப்பதே புதிய சர்ச்சைக்கான காரணம். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details