தெலங்கானா மாநிலத்தின் பிரசித்திப் பெற்ற திருவிழாவான 'பதுக்கம்மா' எனும் மலர் திருவிழா தொடங்கியதை அடுத்து தெலங்கானா ஆளுநர் மாளிகை விழாக்கோலம் பூண்டது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனமாடி இத்திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினார். துர்காஷ்டமியை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த திருவிழா தெலங்கானா மாநிலம் முழுவதும் அமோகமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி பெண்கள் பூக்களால் ஆன வண்ண கோலங்கள் இட்டு அதனைச்சுற்றி, கைத்தட்டி கும்மியடிப்பர். அது பார்ப்பவர் கண்களை வெகுவாக ஈர்க்கும்.
தெலங்கானா 'பதுக்கம்மா' திருவிழாவை கும்மியடித்து கொண்டாடிய தமிழிசை! - தமிழிசை சௌந்தராஜன்
தெலங்கானா மாநிலத்தின் பிரசித்திப் பெற்ற 'பதுக்கம்மா' திருவிழாவை அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தார்.
Tamilisai Soudararajan