ஹைதராபாத்:ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு கரோனா தடுப்பூசிகளை அவசர காலத்திற்குப் பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு முன்னதாக அனுமதி வழங்கியது. இதையடுத்து வரும் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட 30 கோடி பேருக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணித் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது அனைத்து மாநில அரசுகளும், தடுப்பூசி போடுவதற்கான ஆயுத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதற்கானத் தயார் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், "கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் கரோனாவுக்கு எதிராக நன்கு செயல்புரிவதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. எனவே, தெலங்கானாவில் இந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த முடிவு செய்துள்ளோம்.