தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துப்பாக்கியால் தவறுதலாகத் தலையில் சுட்டுக்கொண்ட காவலர்...! - கான்ஸ்டபிள் துப்பாக்கி சுடு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் ஒருவர் தவறுதலாகத் துப்பாக்கி மூலம் தன்னைத்தானே தவறுதலாகச் சுட்டுக்கொண்டதில் படுகாயமடைந்தார்.

telangana-at-komaram-district-constable-miss-fires-on-himself-by-injuring-head
துப்பாக்கியால் தவறுதலாக தலையில் சுட்டுக்கொண்ட கான்ஸ்டபிளால் பரபரப்பு!

By

Published : Feb 23, 2020, 7:10 PM IST

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் சௌட்டாப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிரண் என்பவர் காவலராக திரியாணி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருகிறார்.

கோமரம் பீம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த கிரண், தன்னிடமிருந்த துப்பாக்கியைத் தவறுதலாக இயக்கியதில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.

அந்த விபத்தில் அவர் தலையில் தோட்ட பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அவரை சக காவலர் ஒருவர் பெல்லம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்தத் துப்பாக்கிச் சுடும் சத்தத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது அதிதீவிர சிகிச்சைப் அளிக்கப்பட்டுவருகிறது.

துப்பாக்கியால் தவறுதலாகத் தலையில் சுட்டுக்கொண்ட காவலர்

இதையும் படிங்க:சிவ சேனா துணைத் தலைவர் வண்டி மீது துப்பாக்கிச்சூடு

ABOUT THE AUTHOR

...view details