உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் நோலி கிராமத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர், மாடியில் உள்ள துணியை எடுக்க வந்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த குரங்கு கூட்டம் திடீரென சிறுமியை துரத்தியுள்ளது. பயத்துடன் ஓடிய சிறுமி தடுமாறி கிழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் வலியால் துடித்து அலறிய சிறுமியின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். குரங்குகளால் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.