புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் ஏழு அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த ஒன்பது மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது கரோனா தொற்று காலத்தில், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆசிரியர்கள் கல்வித்துறையை கண்டித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி ஆசிரியர்கள் போராட்டம்
புதுச்சேரி: ஒன்பது மாத நிலுவை சம்பளம் வழங்கக்கோரி முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
Teachers protested because salaries were outstanding
இந்நிலையில் இன்று (செப் 3) காரைக்கால் அடுத்த தலதெருவில் அமைந்துள்ள முதன்மை கல்வி அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், அரசு உதவி பெறும் பள்ளி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முதன்மை கல்வி அலுவலர்கள் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.