ஆந்திர ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனை தனது கட்சி பிரதிநிதிகளுடன் சந்திரபாபு நாயுடு சென்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆந்திராவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.
சட்டம்- ஒழுங்கு கடுமையாகச் சீரழிந்துள்ளது. ஜெகன் மோகன் தொடர்ந்து மக்கள் விரோத கொள்கைகளைக் கடைப்பிடித்துவருகிறார். இந்த அரசின் செயல்பாடுகள் காட்டாட்சியை நோக்கிச் செல்வதைக் காணமுடிகிறது.
கடந்த ஓராண்டில் 350 பொய் வழக்குகள் தெலுங்கு தேசம் கட்சியினர் மீது பதியப்பட்டுள்ளன. தெலுங்கு தேசம் தொண்டர்கள் மீது 800-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன.
13 தொண்டர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். 51 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் ஒய்.எஸ்.ஆர். தலைமைக்கு ஒத்துழைக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
அரசுக்கு எதிராகச் செய்தி வெளியிடும் பத்திரிகை ஊடகங்கள் மோசமான விளைவுகளைச் சந்திக்கின்றன. அதேபோல், சமூக வலைதள கருத்துகளையும் ஒடுக்க அரசு முயற்சிக்கிறது.
இந்த அரசு ஜனநாயகம், மக்கள் விரோதப்போக்கில் பயணிக்கிறது. மாநிலத்தில் அரசியலமைப்பை நிலைநிறுத்துவது ஆளுநரின் பொறுப்பு. ஆகவே இந்த இருண்ட காலத்தில், மக்களிடையை நம்பிக்கையை உண்டாக்கும் வகையில், சட்டம்- ஒழுங்கு பிரச்னையில் ஆளுநர் தலையிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: 'போர் தீர்வாகாது, பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்'- ஃபரூக் அப்துல்லா!