தெலங்கானாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழிசை செளந்தர ராஜன், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி பாணியில் நேரடியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டறியும் பணியில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
களத்தில் இறங்கும் ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜன்? - telangana praja durbar politics duties
ஹைதராபாத்: தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றுள்ள தமிழிசை செளந்தர ராஜன் கிரண்பேடி பாணியில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆளும் அரசுக்கு இணையாக, ஆளுநரும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவது குறித்து தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ஓரங்கட்டும் வகையிலோ அல்லது அதற்கு இணையாக தமிழிசை பிரஜா தர்பார் எனப்படும் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறியும் பணியில் ஈடுபடுவது என்று முடிவெடுத்திருப்பது குறித்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காங்கிரஸ் பிரமுகர் காலில் விழுந்த ஆளுநர் தமிழிசை!