காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 30ஆவது கூட்டம் இன்று (ஜூலை19) காணொலி காட்சி மூலம் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது உச்ச நீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவின்படி காவிரியிலிருந்து 32 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டுமென கர்நாடகா அரசிற்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு காவிரி நீர் ஒழுங்கு முறை ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், 'காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்சமயம் மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு தரவேண்டிய நீரை உடனே வழங்கிட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் ஒன்பது டி.எம்.சியும், ஜூலை மாதத்திற்கு 32 டி.எம்.சியும் தண்ணீர் தர வேண்டும்.
ஆனால் இதுநாள்வரையில் ஒன்பது டி.எம்.சி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய 32 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு தர வேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.