சீன அதிபர் ஜி ஜின்பங் உடனான மாமல்லபுரம் சந்திப்பின்போது தான் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துவந்தனர். நடிகர் விவேக், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தி ட்வீட் செய்திருந்தனர்.
நடிகர் விவேக்கிற்குப் பதில் அளித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, "நன்றி விவேக். இயற்கையை மதிப்பது நமது நெறிமுறைகளில் முக்கியமானது. இயற்கை தெய்வீகத்தன்மையையும், மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மாமல்லபுரத்தின் அழகிய கரையோரங்களும் அமைதியான காலை சூழலும் எனது சில எண்ணங்களை வெளிப்படுத்தச் சரியான தருணங்களை அளித்தன." என்று ட்வீட் செய்துள்ளார்.