தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிருமிகள் மூலம் பரவும் நோயிக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை - மோடி - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

டெல்லி: மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், கொசு உள்ளிட்ட உயிரினங்களிடமிருந்து மனிதனுக்கு பரவும் நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி, நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Breaking News

By

Published : Aug 18, 2020, 8:44 PM IST

மழைக்காலத்தில் உருவாகும் கிருமிகள் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி, நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மழைக்காலத்தில் கிருமிகள் மூலம் பரவும் நோயின் தாக்கம் அதிகரிக்கும். எனவே, அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

மோடியின் ட்வீட்

நிலைமையை அரசு கண்காணித்துவருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும். நீங்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டெல்லி அரசின் உயர் மட்ட அலுவலர்களை சந்தித்து அரசின் தயார் நிலை குறித்த கேட்டறிந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: 20ஆம் நூற்றாண்டின் சிறந்த உளவியலாளர் பி.கே.ஸ்கின்னர் நினைவு தினம் இன்று!

ABOUT THE AUTHOR

...view details