தமிழ்நாடு

tamil nadu

தப்லீக் ஜமாத் வழக்குகள் அனைத்தும் பிகார் நீதிமன்றத்தில் விசாரணை - உச்ச நீதிமன்றம்!

By

Published : Sep 2, 2020, 4:39 AM IST

டெல்லி: தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தையும் பிகாரில் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பீகாரில் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க இருக்கும் தப்லீக் ஜமாத் வழக்கு!
பீகாரில் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க இருக்கும் தப்லீக் ஜமாத் வழக்கு!

டெல்லியில் கடந்த மார்ச் மாதம் தப்லீக் ஜமாத் சார்பில் மிகப் பெரிய மாநாடு நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இஸ்லாமியர்கள் சென்று கலந்து கொண்டனர். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்களும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து மார்ச் இறுதி வாரம் தொடங்கி நாட்டில் கரோனா பரவல் அதிகரித்தது. இந்நிலையில், கரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத்தினர்தான் காரணம் என செய்திகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் தப்லீக் ஜமாத்தினருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டன.

இது குறித்தான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மன்னிப்பு கோரினாலும், அபராதம் செலுத்தினாலும் தங்களது நாடுகளுக்கு செல்ல வெளிநாட்டு தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள்அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று (செப். 1) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஆஜரான அரசு வழக்குரைஞர் (SG) துஷார் மேத்தா, “தப்லீக் ஜமாத் வழக்கை ஒரே நீதிமன்றத்தில் விசாரிப்பது ஒரு மாநிலத்தில் விசாரிப்பது சாத்தியமற்ற ஒன்று. டெல்லி ஒரே நகரமுடைய மாநிலம் என்பதால், இது சாத்தியமானது” என்றார்.

இருப்பினும் இது குறித்தான வழக்குகள் பிகாரில் ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கு மீண்டும் நாளை மறுநாள் (செப். 3) விசாரிக்கப்படவுள்ளது.

முன்னதாக இது போன்ற வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், கரோனா பரவலுக்கு இடையே தப்லீக் ஜமாத்தினர் பலிகடாவாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எதிராக ஊடகங்களிலும் தவறான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...கரோனா பரவலில் தப்லீக் ஜமாத்தினர் பலிகடாவாக்கப்பட்டனர்' - உயர் நீதிமன்றம் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details