ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 280 மாவட்ட கவுன்சில் தொகுதிகளுக்கான தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், 43 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது.
முன்னதாக 43 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 51.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. எட்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 22ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின் சொந்த ஊரான வடக்கு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் அமைத்துள்ளது துரு கிராமம். இங்கு நேற்று மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி.) தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 0.09 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவானது.