பாகிஸ்தானில் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்படும் இந்து சிறுமிகள் - convertion
டெல்லி: பாகிஸ்தானில் இரண்டு இந்து சிறுமிகளை கடத்தி மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் கேட்டுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கி மாவட்டத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் கடத்தி செல்லப்பட்டு இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 13 மற்றும் 15 வயதாகும் அந்தச் சிறுமிகளுக்கு கட்டாயத் திருமணமும் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்நாட்டில் உள்ள இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தியதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.