தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யூஏஈ தூதரகத்துடன் ஸ்வப்னா சுரேஷிற்கு நெருங்கிய தொடர்பு: என்ஐஏ - சிறப்பு நீதிமன்றம்

கேரள முதலமைச்சர் அலுவலகம், கேரளாவின் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகம் ஆகிய அலுவலகங்களுடன் ஸ்வப்னா சுரேஷ் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என என்ஐஏ தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

swapna-suresh-had-close-relationship-with-uae-consulate-nia
swapna-suresh-had-close-relationship-with-uae-consulate-nia

By

Published : Aug 6, 2020, 4:32 PM IST

கேரள தங்கக் கடத்தல் வழக்கு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக ஜூலை 11ஆம் தேதி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (NIA) அலுவலர்கள் கைது செய்தனர்.

இதையடுத்து தங்கக் கடத்தல் தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகிய மூவரிடமும் சுங்கத் துறை, என்ஐஏ (NIA), அமலாக்கப் பிரிவினர் எனப் பல்வேறு தரப்பினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை, என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து அமலாக்கப் பிரிவினர் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் பிணை வழங்கக்கோரி ஸ்வப்னா சுரேஷ் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், ''எந்த அடிப்படை ஆதாரமுமின்றி கற்பனைக் கதைகளால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளேன். இந்த வழக்கு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நடக்கும் அரசியல் போட்டியின் ஒரு பகுதி. மீடியாவின் வண்ணமயமான கட்டுக்கதைகளால் ஒளிபரப்பு வருகிறது. உபா சட்டத்தின் 15,16,17 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய எந்தவித முதன்மை ஆதாரங்களும் இல்லை'' எனக் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த என்ஐஏ தரப்பினர், '' மிகவும் பரபரப்பான வழக்கு இது. இவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகம் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் ஆகிய இரண்டின் செல்வாக்கையும் அனுபவித்துள்ளார். தூதரக அலுவலகப் பணியிலிருந்து ராஜினாமா செய்த பின்னரும் ஸ்வப்னா சுரேஷிற்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் டாலர் வழங்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ஸ்வப்னா சுரேஷ். முதலமைச்சர் அலுவலகத்திலும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால், இவருக்கு பிணை வழங்க வேண்டாம்'' என கேட்டுக்கொண்டது.

இதையும் படிங்க:ஸ்வப்னா சுரேஷ் உள்பட மூவரையும் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details