சுயசார்பு இந்தியா பற்றி பிரதமர் நரேந்திர மோடி அதிகமாக பேசிவரும் நிலையில் சுயசார்பு இந்தியா மற்றும் சுதேசி கருத்துக்கள் பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
அதில், ''சுதேசி என்பதற்கு அனைத்து வெளிநாட்டுப் பொருள்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நமக்கு தேவையானதை சில நிபந்தனைகளோடு நாம் வாங்கிகொள்ள வேண்டும். சுதேசி என்பது நமது உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், வெளிநாட்டுப் பொருள் முதலீடுகள் நமது நாட்டிற்குள் வருவதைக் கட்டுப்படுத்தவும் தொடங்கப்பட்டது.
ஒரே பொருளாதாரக் கொள்கை அனைத்து பகுதிகளுக்கும் ஒத்துப்போகாது. கரோனா சூழலில் உலகமயமாக்கல் சரியான முடிவுகளைத் தரவில்லை. அனைத்து சுயசார்பு நாடுகளுக்குள்ளும் நல்ல ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் உலகத்தை ஒரே குடும்பம் என்று எண்ண வேண்டும். ஆனால் அந்தக் குடும்பத்திற்கு ஒரே மாதிரியான சந்தை சரியாக இருக்காது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.