தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்

டெல்லி: முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

sushma swaraj

By

Published : Aug 7, 2019, 2:17 AM IST

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் வீட்டிலிருந்தபோது நேற்று இரவு 9.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச்சென்றனர்.

பின்னர் அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காதாதால் மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 67. இதையடுத்து சுஷ்மாவின் மறைவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சுஷ்மாவின் உடல் நள்ளிரவே அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவரின் உடல் இன்று பிற்பகல் 12 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பின் பிற்பகல் 3 மணியளவில் லோதி ரோடு பகுதியில் உள்ள மின்சார மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ், 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய பிரதேசத்தின் விதிஷா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மோடி அரசின் கீழ் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பின் இந்த பொறுப்பை வகித்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை பெற்ற சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுத்துறை அமைச்சராக தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.

எனினும் உடல்நலக் குறைவு காரணமாக 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்த சுஷ்மா, அரசியலில் இருந்து விலகியிருந்தார். அவரது மறைவு பாஜக உள்ளிட்ட அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details