சவுதி அரேபியாவில் வேலைப் பார்க்கும் அலி என்ற வாலிபர் தான் கடந்த 21 மாதங்களாக சவுதியில் எந்த ஒரு விடுமுறையும் அளிக்கப்படாமல் வேலை செய்து வருவதாகவும், தற்போது குடும்பத்தில் சில பிரச்னைகள் உள்ளதால் அதை தீர்த்து வைக்க இந்தியா திரும்பி வர முடியவில்லை என்றும், இந்தியா வர உதவ வேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.
சவுதி அரேபியாவில் சிக்கிய வாலிபர்... உதவிக்கரம் நீட்டும் சுஷ்மா - assures help to Indian
டெல்லி: சவுதி ஆரேபியாவில் சிக்கி தவிக்கும் வாலிபரை இந்தியா கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
சுஷ்மா
இதைப் பார்த்த அவர் நீங்கள் இந்தியா வர அனைத்து ஏற்பாடுகளும் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொள்ளும் என தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் வேலைக்கு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் அனைவரும் பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும், கவலை கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.