தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பத்மஸ்ரீ விருதுபெற்ற இரினாவின் விசா நீட்டிப்பு குறித்து சுஷ்மா ஸ்வராஜ் தகவல்!

பசுக்களின் பாதுகாப்பிற்காக பத்மஸ்ரீ விருதுபெற்ற ப்ரீட்ரீகி ப்ரூனிங் விசா நீட்டிப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

sushma swaraj

By

Published : May 26, 2019, 11:26 PM IST

ஜெர்மனியைச் சேர்ந்த ப்ரீட்ரீகி இரினா ப்ரூனிங்(61), விலங்குகளின் பராமரிப்பு, பசுக்களின் நலன்களுக்காக சிறந்த சேவையாற்றுவதற்காக 2019ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், அவரின் விசா காலம் ஜுன் 25ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், விசா நீட்டிப்பு அதிகரிக்க கோரி பதிவிட்டிருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மக்களின் இன்னல்கள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். தங்களின் விசா நீட்டிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ப்ரீட்ரீகி இரினா ப்ரூனிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இதை என் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி. நான் ஒரு அறிக்கையை கேட்டிருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details