சரவணபவன் உணவக மேலாளர் மகள் ஜீவஜோதி. இவரின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், ஜீவஜோதியை விரும்பியதாகக் கூறப்படுகிறது.
எனவே, திருமணம் செய்ய இடையூறாக இருந்த ஜீவஜோதியின்கணவர் சாந்தகுமாரை ராஜகோபால் உட்பட எட்டு பேர் கடத்திக் கொண்டுச் சென்று கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 வருடங்கள்சிறைதண்டனை வழங்கியது.
இதனைத்தொடர்ந்து, 10 வருட சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தக்கோரி தமிழ்நாடு அரசின்சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ராஜகோபாலை குற்றவாளி என உறுதிப்படுத்தி 10 வருட சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்நீதிமன்றம் மாற்றியது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றமும், சாந்தகுமாரை கொலை செய்தது ராஜகோபால்தான் என உறுதி செய்து அவருக்குஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.