தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாபர் மசூதி வழக்கை 9 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு! - Babri Masjid

டெல்லி: பாபர் மசூதி வழக்கின் விசாரணையை ஒன்பது மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதி

By

Published : Jul 19, 2019, 2:12 PM IST

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை ரேபரேலி நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனையடுத்து இவர்களின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது.

எனவே, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தும்படியும், இரு ஆண்டுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. அதன்படி லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் ஒன்பது மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details