தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மக்களுக்கு தேவை உணவுதானே தவிர, உங்களின் உரை அல்ல' - மத்திய அரசை விமர்சித்த கபில்சிபல் - கபில்சிபில்

டெல்லி: புலம்பெயரும் மக்களின் மீது தடியடி நடத்தாமல் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், மக்களுக்கு தேவை உணவுதானே தவிர உங்களின் உரை அல்ல எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Kapil Sibal
Kapil Sibal

By

Published : Apr 16, 2020, 5:36 PM IST

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பலரும் பல இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர். புலம்பெயரும் ஏழைத் தொழிலாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு அரசு முதலில் மக்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். புலம்பெயரும் மக்களின் மீது தடியடி நடத்தாமல் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். மக்களுக்கு தேவை உணவுதானே தவிர உங்களின் உரை அல்ல.

ஏழை மக்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி வரை இலவசமாக நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்க வேண்டும். இது தொடர்பாக சோனியா காந்தியும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்”. என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நியாயவிலைக் கடை அட்டை இல்லாதவர்களுக்கு உடனடியாக ரேஷன் அட்டை வழங்க வேண்டும். ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு இதன் மூலம் பொருள்கள் கிடைக்க உதவியாக இருக்கும். நூற்றுக்கணக்கான மக்கள் பட்டினியால் கிடக்கும் போது உணவுப் பொருள்கள் கிடங்குகளில் தேங்கிக்கிடப்பதாக ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனாவை தடுக்க இதுதான் ஒரே வழி - ராகுல் தரும் ஐடியா

ABOUT THE AUTHOR

...view details