டெல்லியில் சமய மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் தான் கரோனா நோய்க் கிருமியை இந்தியாவில் அதிகம் பரப்பியவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த அதீத நோய்ப் பரப்பிகள் யார்? அவர்களை அடையாளம் காண முடியுமா? அவர்கள் தங்களை நோய்ப் பரப்பிகளாக உணர்வார்களா? இந்த கேள்விகளுக்கான விடையை கீழே காணலாம்.
யார் அதீத நோய்க் கிருமி பரப்பிகளாக பார்க்கப்படுவர்?
- ஒரு பயங்கர பெருந்தொற்று சமயத்தில், தங்களிடம் தொற்றிக்கொண்ட நோய்க் கிருமியை, பரவலாக வெகுசன மக்களுக்கு பரப்புபவர்களை, அதீத நோய்க் கிருமி பரப்புபவர்களாக கருதப்படுவர்.
- சில மக்கள் தாங்கள் அறியாமலையே கிருமியை சுமந்துக்கொண்டு, தங்களும், நோய்க் கிருமி பரப்பிகளாக உலா வருவர்.
- சாதாரண நோய்க் கிருமி பரப்பிகள் ஒன்று அல்லது இரண்டு, மூன்று நபர்களுக்கு மட்டும் தான் நோய்க் கிருமியைப் பரப்புவார்கள். ஆனால் சூப்பர் ஸ்ப்ரெடெர்ஸ் என்று அறியப்படும் அதீத நோய்க் கிருமி பரப்புபவர்கள், 100 அல்லது 1000 மக்களுக்கு மேல் தங்கள் மூலம் நோய்க் கிருமியைப் பரப்புவார்கள்.
முன்னதாக உலகத்தில் உலா வந்த அதீத நோய்ப் பரப்பிகள்
- 1900களில் டைபாய்டு காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லாமலேயே, ஒரு பெண்மணி 51 நபர்களுக்கு அந்த நோய்க் கிருமியைப் பரப்பியது வரலாற்றுச் சுவடுகளில் படிந்திருக்கிறது. அந்த பெண்மணியிக்ன் பெயர் ஐரிஷ் குக் மேரி மெலன் (1869-1938). பின் காலத்தில் இவர் ‘டைபாய்டு மேரி’ என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். அவர் பின்னர் அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில் சாகும்வரை தனிமைபடுத்தப்பட்டார். அவருக்கு தெரியாமலேயே அவர் தன் உடம்பில் நோய்க் கிருமியை சுமதிருந்துள்ளார். அந்த டைபாய்டு நோய்க் கிருமி இருந்ததற்கான எந்த அறிகுறியும் அவர் உடம்பில் தென்படவில்லை என்பது ஆச்சரியத்துக்குள்ளான செய்தியாக அக்காலத்தில் பார்க்கப்பட்டது. 1907ஆம் ஆண்டு, டைபாய்டு மேரி தான் அமெரிக்காவில் நோய் அறிகுறி இல்லாமல் டைபாய்டு நோய்க் கிருமியை சுமந்திருந்த முதல் நபராக பார்க்கப்பட்டார். ஆனால் இதனை கண்டறிவதற்குள், அந்த நோய்க் கிருமியை பல நபர்களுக்கு மேரி பரப்பியிருந்தார்.
- 1998ஆம் ஆண்டு, பின்லாந்தில் உயர்கல்வி பயின்று வந்த மாணவர் 22 நபர்களுக்கு மீசில்ஸ் நோய்க் கிருமியைப் பரப்பினார். ஆனால் அதில் 8 நபர்கள் அதற்கான தடுப்பு ஊசியை முன்னதாக எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1995ஆம் ஆண்டுகளில் காங்கோ நாட்டில், 2 நபர்கள் 50 பேருக்கு எபோலா நோய்க் கிருமியைப் பரப்பியதாக நம்பப்படுகிறது.
- 2002-2003ஆம் ஆண்டுகளில், சார்ஸ் நோய் சிறு தொற்றாக அறியப்பட்டபோது, சிங்கபூரில் இருந்து பல நாடுகளுக்கு சென்ற சிலர், அதீத நோய்ப் பரப்ப்பிகளாக மாறி, ஆள் ஒன்றுக்கு 10 நபர்கள் வீதம் நோய்ப் பரப்பியதாக அறியப்படுகிறது.
கரோனா வைரசை கட்டுப்படுத்த களத்திலிறங்கும் ஸ்மார்ட் சிட்டிகள்!
அதீத நோய்ப் பரப்பிகள் ஒரு நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள் என்பதற்கு கரோனா போன்ற நோய்க் கிருமித் தொற்று சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.
நாடுகளை அச்சுறுத்திய அதீத கரோனா நோய்ப் பரப்பிகள்
தென் கொரியா
தென் கொரியாவில் கரோனா நோய்த் தொற்று இருப்பதாக அறியப்பட்ட பிரிஞ் ஆலய உறுப்பினரான 31ஆவது நோயாளி தான் அதிகளவிலான நபர்களுக்கு நோய்க் கிருமியை பரப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நபர் தென் கொரியா நாடுகளை நன்குச் சுற்றித் திரிந்துள்ளார். மருத்துவர்கள் பரிந்துரையை இந்த நோயாளி ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவரால் தோராயமாக 1,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகிறது. இதனையடுத்து தென் கொரியாவில் ஒரு பெரும் வெடிப்பைப் போன்று நோயாளிகளின் எண்ணம் கூடியது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி
இத்தாலி அரசிற்கு அவர்கள் நாட்டில் யார் அதீதமாக நோய் பரப்பினார்கள் என்பது குறித்த எந்த தெளிவும் இல்லை. அவர் யார் என்று கண்டறிய இத்தாலி அரசு போராடி வருகிறது. இந்நாட்டின் வர்த்தக தலைநகரான மிலனை சுமந்திருக்கும் லோம்பார்டியில், 100 நோயாளிகளை ஒரே நாளில் வெளிகண்டது பெரும் அதிர்ச்சியை அளித்தது. இன்னும் அந்த அதீத பரப்பி யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இங்கிலாந்து
இதுவரை கண்டறியப்பட்டதில் ஸ்டீவ் வால்ஷ் தான் அதீத நோய்ப் பரப்பியாக இங்கிலாந்து நாட்டில் பார்க்கப்படுகிறார். இவர் அறியாமலேயே சிங்கப்பூர் பயணத்தின்போது இவருக்கு இந்த நோய்க் கிருமித் தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது பயணத்தின் போது, 11 நபர்களுக்கு நோய்க் கிருமியை பரப்பியுள்ளார். ஸ்டீவ் குணமடைந்து வீடு திரும்பினாலும், அவர் மூலம் நோய்த் தொற்றை கொண்டவர்கள் நிலைமை கேள்விக்குறிதான்.
மும்பை, மஹாராஸ்டிரா(இந்தியா)
65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மும்பையில், பல அலுவலகங்கள் செயல்பட்டு வரும் பிரபாதேவி எனுமிடத்தில், தெருவில் வைத்து மதிய உணவு வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு கோவிட்19 நோய் உறுதிசெய்யப்பட்டது. அதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், அவரிடம் உணவு வாங்கி உண்ட அனைவரையும் கஸ்தூரிபா மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட வீடற்றவர்கள்
டெல்லி(இந்தியா)