நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதனையடுத்து பலகட்ட செயல்முறைகளுக்குப் பின் இறுதியாக விண்கலத்தில் உள்ள ’விக்ரம்’ லேண்டர் நாளை அதிகாலை 1.30 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்தது.
சந்திரயான் 2 வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து! - chandrayan 2 sand drawing
ஒடிசா: ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், சந்திரயான் 2 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க, மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து கூறியுள்ளார்.
இத்திட்டம் வெற்றிபெறும் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் 2 வெற்றிபெற மணல் சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். ஒடிசாவை சேர்ந்தவரான இவர், புரி கடற்கரையில் சந்திராயன் 2 விண்கலம் நிலவை சுற்றி வருவதை போல மணலில் ஓவியம் வரைந்துள்ளார்.
அதில், சந்திரயான் 2 வெற்றிபெறும் போன்ற வாசகங்களையும் எழுதியுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவர் வரைந்த மணல் சிற்பத்தின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.