பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதும், தாக்குதல்கள் நடத்துவதும் அவ்வப்போது நடந்துவருகிறது. அதுபோன்ற நேரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளக்கூடிய சூழல்கூட ஏற்படுவதுண்டு.
எதிரி நாட்டு ராணுவ டேங்குகளை அழிக்கும் ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி! - test fire
டெல்லி: எதிரி நாட்டு ராணுவ டேங்குகளை தாக்கி அழிக்கும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘நாக்’ ஏவுகணையின் சோதனை நேற்று வெற்றிகரமாக முடிந்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ளத்தக்க சிறப்பு போர் ஆயுதங்களை இந்திய பாதுகாப்புப்படை தயாரித்து வருகிறது. அந்த வகையில், எதிரி நாட்டு ராணுவ டேங்குகளை அழிக்கும் திறன் கொண்ட ‘நாக்’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.
இதற்கான சோதனை, ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் (pokhran) ராணுவ சோதனை தளத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தது. பகல், இரவு ஆகிய இரண்டு நேரங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. (முகப்பில் கொடுக்கப்பட்டுள்ளது கோப்புப்படம்)