அண்மைக் காலமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராகவும், அவரது கடந்த கால அரசியல் தொடர்பாகவும் விமர்சிக்கும் வகையில் பல பதிவுகள் பரவலாகி வருகின்றன. இதற்கு பின்னணியில் பாஜகவின் தொழிற்நுட்ப பிரிவு உள்ளதாக சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "பாஜகவின் தொழிற்நுட்ப (ஐ.டி.) பிரிவினரில் சிலர் ஆதாரமற்று என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். போலியான முகவரிகளில் இருந்து ட்வீட்களை வெளியிடுகின்றனர். இந்த பதிவுகளால் கோபமடையும் எனது ஆதரவாளர்களும், பின்தொடர்பவர்களும் இதே போல தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தினால் பொறுப்பேற்க முடியாது.