தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜே.என்.யு. பல்கலை. தாக்குதல்: நாடு முழுவதும் பற்றிக்கொண்ட போராட்டம்!

டெல்லி: ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

By

Published : Jan 6, 2020, 7:57 PM IST

JNU
JNU

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) வளாகத்தில் பருவநிலை (செமஸ்டர்) தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரியும், தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு வந்த முகமூடி கும்பல் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவத்தில், ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், ஆசிரியர்கள் உள்பட 50 பேர் காயமடைந்தனர். இது நாடெங்கிலும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாணவர் சங்கம், ஏ.ஐ.எஸ்.எப். உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள், ஜே.என்.யு. தாக்குதலைக் கண்டித்து சண்டிகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச வாரணாசியிலுள்ள பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே கூறிகையில், "அனைத்து மாணவர் சங்கங்களையும் அமைதி காக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற முக்கியப் பிரச்னைகளில் எதிர்க்கட்சிகள் சிந்தித்து கருத்து கூற வேண்டும். வாதம், பிரதி வாதம் இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்க்காது.

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் ஜே.என்.யு. தாக்குதலைக் கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி துர்காபூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: மும்முனை போட்டியை நோக்கிச் செல்லும் டெல்லி?

ABOUT THE AUTHOR

...view details