மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொள்ளக் கூடாது, குலக்கல்வி போல் இருக்கும் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வரக்கூடாது, நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுச்சேரியிலுள்ள நூற்றாண்டு பாரம்பரியமிக்க கலைக்கல்லூரியை மூடக் கூடாது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சைக்கிள் பேரணிநடத்தினர்.
பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சைக்கிள் பரப்புரை
இந்தி திணிப்பை எதிர்த்தும் குலக்கல்வி முறையை கொண்டு வர முயலும் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் புதுச்சேரி இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று சைக்கிள் பரப்புரை மேற்கொண்டனர்
பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டனர்
இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியை இந்திய வாலிபர் சங்க நிர்வாகி கண்ணன் தொடங்கிவைத்தார். புதுச்சேரி மிஷின் வீதியில் கலவை கல்லூரி அருகே தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டது.