தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆக்கிரமிப்பு பணியை கைவிட வேண்டும்: சாலையோர வியாபாரிகள் வலியுறுத்தல் - சாலையோர வியாபாரிகள் போராட்டம்

புதுச்சேரி: ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை கைவிடக்கோரி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வலியுறுத்தினர்.

சாலையோர வியாபாரிகள்
சாலையோர வியாபாரிகள்

By

Published : Oct 28, 2020, 8:58 PM IST

Updated : Oct 28, 2020, 9:08 PM IST

புதுச்சேரியில் கடந்த சில வருடங்களாக சாலையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தும் ,தள்ளுவண்டி கடைகள் போட்டும் வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுப்பணித் துறைக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலர்கள் கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 28) புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்க சிறப்பு தலைவர் பிரபுராஜ் தலைமையில், சாலையோர வியாபாரிகள் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது பொதுப்பணித்துறை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் தொடர்ந்து சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை என்பது சட்டத்திற்குப் புறம்பான செயல். அரசு சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து முறைப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

Last Updated : Oct 28, 2020, 9:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details