ஒடிசா மாநிலம், மயூர்பான்ஜ் மாவட்டத்தில் உள்ள சுக்குலியா வட்டத்தில் பாரியா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வாழும் பழங்குடியின சமூகத்தில் பிறக்கும் குழந்தைக்கு, முதல் பல் மேல் தாடையில் தோன்றினால், அது தீய சகுணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தீய சகுணத்தைப் போக்க, அந்தக் குழந்தைகளை நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை இப்பழங்குடியினர் காலம் காலமாகப் பின்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று பாரியா கிராமத்தில் இரண்டு பதின்ம வயது சிறுவர்களுக்கு தெரு நாய்களுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.